அமெரிக்காவின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான, இந்தியாவின் பாகுபலி ராக்கெட் LVM3 மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் ஏவப்படுகிறது.
அமெரிக்காவின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான, இந்தியாவின் பாகுபலி ராக்கெட் LVM3 மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இதுவரை இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோள்களில் மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோளாக இது இருக்கும். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட AST SpaceMobile நிறுவனம், செயற்கைக்கோள் மூலம் 4ஜி, 5ஜி இணையச் சேவை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. சுமார் 6,100 கிலோ எடை கொண்ட ப்ளூபேர்ட்-6 செயற்கைக்கோள், காலை 8.24 மணிக்கு LVM3 ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் ப்ளூபேர்ட்-6 தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் மற்றும் LVM3 ராக்கெட் தொடர்பான தொழில்நுட்ப விவரங்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட AST Space Mobile நிறுவனம் வடிவமைத்துள்ள ப்ளூபேர்ட்-6 செயற்கைக்கோள் 4ஜி, 5ஜி இணையச் சேவை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்கைக்கோளின் எடை சுமார் 6,100 கிலோ ஆகும். இந்திய மதிப்பில் இதன் மதிப்பு சுமார் 560 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இஸ்ரோ விண்ணில் அனுப்பிய செயற்கைக்கோள்களில் மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் இதுவாகும். இந்தச் செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் LVM3 ராக்கெட், இஸ்ரோவின் ஆறாவது LVM வகை ராக்கெட்டாகும். சுமார் 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்ட ராக்கெட்டில் திட, திரவ மற்றும் கிரையோஜனிக் அடுக்குகள் உள்ளன. சந்திரயான் விண்கலமும் இதே LVM3 ராக்கெட் மூலம் ஏவப்பட்டிருந்தது.