indian sc condemns high price selling cancer medicine ai
இந்தியா

புற்றுநோய் மருந்து விலை: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி! படுகொலைக்கு சமம் என கருத்து!

புற்றுநோய் மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது சாத்தியமா? இதற்கு மத்திய - மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்...

Rishan Vengai

புற்றுநோய் மருந்து விலைகள் அதிகமாக இருப்பது மருத்துவ பயனாளிகளுக்கு சிரமம் ஏற்படுத்துகிறது. உச்ச நீதிமன்றம் இதை படுகொலைக்கு சமம் எனக் கூறி, மருந்து விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. காப்புரிமை சிக்கல்களை தீர்க்கும் வழிமுறைகள் தேவை என வணிகர் சங்கம் பரிந்துரைத்துள்ளது.

அண்மையில் உயர் சிகிச்சை மருந்து விலைகள் குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சில்லறை விற்பனையாளருக்கு 2 ஆயிரத்து 700 ரூபாய்க்கு வழங்கப்பட்ட புற்றுநோய் மருந்து, மருத்துவ பயனாளிக்கு 27 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவது குறித்து அதிர்ச்சி தெரிவித்தது. இது படுகொலைக்கு சமம் எனக் கூறிய நீதிபதிகள், மருந்துகளுக்கு 16 விழுக்காடு லாப வரம்பு நிர்ணயிப்பது குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறது.

cancer cells

இந்த சூழலில், கார்ப்பரேட் மருத்துவமனைகள் மற்றும் அதனையொட்டிய மருந்துக் கடைகளிலேயே புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்கான உயர் சிகிச்சைக்கான மருத்துகள் விற்கப்படுவதாக கூறியுள்ள தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம், பொதுவாக மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுவதில் காப்புரிமை சார்ந்த சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

காப்புரிமையிலிருந்து வெளிவந்த மருந்துகளை மருத்துவமனைகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கூறும் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம், அதனை கட்டுப்படுத்தவும் சில வழிமுறைகளை பரிந்துரைக்கிறது.

உயர் சிகிச்சை மருந்துகளின் விலையை கட்டுப்படுத்துவதில், விரைவான, உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பதே மருத்துவ பயனாளிகளின் எதிர்பார்ப்பதாக உள்ளது.