இந்தியா

வரலாறு காணாத வீழ்ச்சியில் இந்திய ரூபாய்! காரணம் என்ன?

PT

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 81 ரூபாய் 50 காசுகளாக வீழ்ச்சி கண்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில், அந்நிய செலாவணி வர்த்தக தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 41 காசுகள் சரிந்து 81 ரூபாய் 50 காசுகளானது.

நடப்பு 2022ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இதுவரையிலான நாட்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 புள்ளி 42 விழுக்காடு அளவிற்கு சரிந்துள்ளது. ஆண்டு தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 73 ரூபாய் 74 காசுகளில் இருந்தது. தற்போது 7 ரூபாய் 73 காசுகள் அளவிற்கு தனது மதிப்பில் சரிந்துள்ளது.

இதற்கு அமெரிக்கா வட்டி விகிதங்களை உயர்த்தி வருவது, சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை போன்றவையே காரணமாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, ரூபாய் மதிப்பு மட்டுமல்லாமல், ஜப்பானின் யென், யூரோ, பிரிட்டனின் பவுண்ட் உள்ளிட்டவைகளின் மதிப்பும் சரிந்தே காணப்படுகிறது.