உலகிலேயே முதல்முறையாக ரயில் பெட்டிகளில் சூரிய மின்தகடுகளை பொருத்தி, சூரிய மின்சக்தியுடன் இயங்கக்கூடிய ரயிலை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
டெல்லியில் ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு, சூரிய மின்சக்தியுடன் இயங்கும் ரயிலை அறிமுகம் செய்து வைத்தார். டீசல் எஞ்சினுடன் கூடிய இந்த ரயில் பெட்டிகள் மீது சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு ரயிலில் உள்ள மின் விளக்குகள், மின்விசிறிகள், தகவல் பலகைகள் இயக்கப்படும். இரவு நேரத்திலும் இவற்றுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில் சூரிய சக்தி மின்தகடுகளுடன் பேட்டரிகள் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்த 6 மாதங்களில் மேலும் 24 ரயில்பெட்டிகள் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.