இந்தியா

பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!

பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!

EllusamyKarthik

பாரத பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியை இன்று காலை செலுத்திக் கொண்டார். எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவருக்கு அங்கு தடுப்பூசியை செலுத்திய புதுச்சேரியை சேர்ந்த செவிலியர் அந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 

“புதுச்சேரி  தான் எனது பூர்வீகம். நான் எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். நான் தற்போது தடுப்பூசி பிரிவில் பணியாற்றுகிறேன். பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக்கொள்ள வருகிறார் என இன்று காலை தான் எனக்கு தெரியும். ‘பிரதமருக்கு தடுப்பூசி போட வேண்டும்’ என்று சொன்னார்கள். 

பிரதமர் என்னுடன் நன்றாக பேசினார். அவருக்கு பாரத் பயோடெக்கின் தடுப்பூசி போடப்பட்டது. 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் போடப்படும். நான் எங்கிருந்து வருகிறேன் என பிரதமர் கேட்டதற்கு இங்கிருந்து வருவதாகக் கூறினேன். அதான் தடுப்பூசி போட்ட வலியே தெரியவில்லை என பிரதமர் சொன்னார்” எனத் தெரிவித்துள்ளார் செவிலியர் நிவேதா. 

<iframe width="494" height="278" src="https://www.youtube.com/embed/vMr40P_lhuE" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>