ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்ற போது இந்திய கடற்படை அதிகாரி டி.எஸ். சௌஹான் மரணம் அடைந்தார்.
இந்திய கப்பல் படையிலுள்ள விமானங்களை ஏற்றிச் செல்லும் வசதி நிரம்பிய கப்பல்தான் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா. இந்தக் கப்பல் கர்நாடகா மாநிலத்தின் கார்வார் துறைமுகம் நோக்கி பயணித்தது. அப்போது அந்தக் கப்பலின் திடீரென்று ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அந்தத் தீயை கட்டுப்படுத்த அதிகாரிகள் முற்பட்டனர்.
இதற்காக லெப்டினட் கமாண்டர் டி.எஸ். சௌஹான் தலைமையில் வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீவிர போராட்டத்திற்குப் பின் அவர்கள் இறுதியில் தீயை அணைத்தனர். தீயினால் ஏற்பட்ட புகை மற்றும் தீப்பொறிகளின் காரணமாக சௌஹான் சுய நினைவினை இழந்து மயங்கி விழுந்தார். அதனையடுத்து அவரை கார்வாரிலுள்ள கப்பல் படையின் மருத்துவமனைக்கு சகவீரர்கள் கொண்டு சென்றனர். எனினும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இதனால் சௌஹான் மரணமடைந்தார்.