இந்தியா

இனி அனைத்து கேள்விகளுக்கும் ஒரே எண்! ‘139’ இந்திய ரயில்வே துறையின் ஹெல்ப்லைன்!

இனி அனைத்து கேள்விகளுக்கும் ஒரே எண்! ‘139’ இந்திய ரயில்வே துறையின் ஹெல்ப்லைன்!

EllusamyKarthik

இந்திய ரயில்வே துறை அண்மையில் ரயில் பயணம் தொடர்பான அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் ஒரே ஹெல்ப்லைன் எண்ணின் கீழ் தீர்வளிக்கும் வகையில் 139 என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயணம் தொடர்பான சந்தேகங்கள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கால் சென்டர் நிர்வாகிகளை தொடர்பு கொள்ள, பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவி குறித்த விவரங்கள், கட்டணம் குறித்த விவரங்கள், உணவு முன்பதிவு மற்றும் புகார் குறித்த நிலை உள்ளிட்ட அனைத்திற்கும் இதில் பதில் கிடைக்கும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

பயணிகளுக்கு துரிதமாக சேவை அளிக்கும் நோக்கில் ஒரே ஹெல்ப்லைனை கொண்டு வந்துள்ளோம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. சுமார் 12 மொழிகளில் இந்த சேவை இப்போதைக்கு இந்தியாவில் கிடைக்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது.