இந்தியா

மொத்த வருமானத்தையும் கடனாக செலுத்தும் விவசாயிகள்

மொத்த வருமானத்தையும் கடனாக செலுத்தும் விவசாயிகள்

webteam

நாட்டில் உள்ள பாதி விவசாய குடும்பங்களின் வருமானம், கடன்களை திரும்ப செலுத்ததான் போதுமானதாக இருக்கிறது என நபார்டு வங்கி ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

2016-2017ஆம் ஆண்டுக்கென கிராமப்புறங்களில் நபார்டு வங்கி ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் 52.5% விவசாய குடும்பங்கள், கடனில் தத்தளிப்பது தெரிய வந்துள்ளது. சராசரியாக ஒரு விவசாய குடும்பம், ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 602 ரூபாய் கடன் வைத்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் ஆண்டு வருமானம் என்பது, சராசரியாக ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. 

குறிப்பாக இரண்டு ஹெக்டேருக்கு அதிகமாக நிலங்கள் வைத்திருக்கும் 60% விவசாய குடும்பங்கள் கடனில் உள்ளன. தெலங்கானாவில் 79%, ஆந்திராவில் 77%, கர்நாடகாவில் 74% விவசாய குடும்பங்கள் கடனில் சிக்கியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை 60%, கேரளாவில் 56%, ஒடிசாவில் 54% விவசாய குடும்பங்களும் கடனில் தத்தளிப்பது தெரியவந்துள்ளது.