டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கு 7.4 கிலோ எடையில் இருந்த சிறுநீரகத்தை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
பொதுவாக ஒருவருக்கு சிறுநீரகத்தின் எடை 120 முதல் 150 கிராம் வரை இருக்கும். ஆனால் டெல்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் இடது சிறுநீரகம் வழக்கத்தை விட பெரிதாக இருந்தது பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதை அகற்ற மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டதில் 7.4 கிலோ எடை கொண்ட சிறுநீரகம் அகற்றப்பட்டது.
நாட்டிலேயே முதல்முறையாகவும் உலகிலேயே மூன்றாவது அதிக எடை கொண்ட சிறுநீரகம் என்ற சிறப்பை இது பெற்றுள்ளது.