இந்தியா

அத்து மீறிய பாகிஸ்தானிற்கு இந்தியா பதிலடி: 3 பாக். வீரர்கள் பலி

அத்து மீறிய பாகிஸ்தானிற்கு இந்தியா பதிலடி: 3 பாக். வீரர்கள் பலி

webteam

சர்வதேச எல்லைக் கோட்டைத் தாண்டி சென்று பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த தாக்குதலில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாயினர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ மேஜர் உட்பட 4 வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி சென்ற இந்திய ராணுவ வீரர்கள், அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 3 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாயினர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.