இந்தியா

காஷ்மீர்: தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ மோப்ப நாய் படுகாயம்

JustinDurai

வீட்டிற்குள் நுழைந்த ராணுவ மோப்ப நாய் அங்கிருந்த தீவிரவாதிகளை கவ்வி பிடிக்க முயன்றபோது துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு உள்ளானது.

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் தங்ப்வாரா எனும் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து அந்த வீட்டை நோக்கி ராணுவத்தில் பயிற்சி பெற்ற ஜூம் என்ற பெயர் கொண்ட நாய் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.  வீட்டிற்குள் நுழைந்த ஜூம் அங்கிருந்த தீவிரவாதிகளை கவ்வி பிடிக்க முயன்றது. அப்போது நடந்த மோதலில், மறைந்திருந்த தீவிரவாதிககள் நாயை நோக்கி இருமுறை சுட்டதில் படுகாயமடைந்தது. படுகாயங்களுடன் ஜூம் நாய் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளது. பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் திறம்பட செயல்பட்ட  ஜூம் நாயின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் பிரிவினர் வெளியிட்டுள்ளனர். நாய் விரைந்து குணமடைய வேண்டி சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக, ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தங்பவா என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பாதுகாப்புப் படையினர்  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது சுட்டனர். உடனடியாக பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். நேற்று அதிகாலை வரை நீடித்த இந்த சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் மேலும் ஒரு தீவிரவாதி பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவிப்பு வழக்கு: ஆ.ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்