இந்தியா

வீணான 2.6 கோடி ஹெக்டேர் நிலங்களை 2030-க்குள் சீரமைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி

webteam

இந்தியாவில் உள்ள சுமார் 2.6 கோடி ஹெக்டேர் வீணான நிலங்களை 2030-ஆம் ஆண்டுக்குள் சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி ஐநாவில் கூறியுள்ளார்.

நில சீரழிவு குறித்து ஐநாவில் நடைபெற்ற உயர்மட்ட கருத்தரங்கில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய மோடி, உலகில் மூன்றில் இரண்டு பங்கு நிலம் சீரழிந்துவிட்டதாகவும், இதை தடுக்காமல் விட்டால் சமுதாயங்களின் அடித்தளத்தையே கரைத்துவிடும் எனக் குறிப்பிட்டார். எனவே நிலம் மற்றும் அதன் வளங்கள் மீதான அழுத்தத்தை குறைக்க வேண்டும் என கூறிய அவர் அனைவரும் இணைந்து அதை சாதிக்கமுடியும் என்று குறிப்பிட்டார். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 30 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு வனப்பகுதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.