இந்தியா

`உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியா தொடரும்'- வெளியான கணிப்பு

webteam

உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நாடாக இந்தியா தொடரும் என ஐ.எம்.எஃப். எனப்படும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

உலக வங்கி மற்றும் ஐ.எம்.எஃப். அதிகாரிகளின் வருடாந்திர கூட்டத்திற்குப் பிறகு, 2023ஆம் ஆண்டிற்கான உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் 2021ல் 6% என்று இருந்த உலக பொருளாதார வளர்ச்சி, 2022ல் 3.2% என்றும், 2023ல் 2.7% என்றும், மேலும் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளின் பொருளாதாரமும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, 2022 - 2023ஆம் ஆணடுகளில் பெரும்பாலும் குறையும் என ஐ.எம்.எஃப். கணித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 6.8 விழுக்காடாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் இது 6.1 விழுக்காடாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் குறைவு இருந்தாலும், உலகின் வேகமாக பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியா தொடரும் என ஐ.எம்.எஃப். கணித்துள்ளது.