இந்தியா

ரேடியேசன் எதிர்ப்பு ருத்ரம்-1 ஏவுகணை: இந்தியாவின் சோதனை வெற்றி

ரேடியேசன் எதிர்ப்பு ருத்ரம்-1 ஏவுகணை: இந்தியாவின் சோதனை வெற்றி

Veeramani

எதிரிகளின் ரேடார்களை தாக்கி அழிக்கும், முதல் ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணை ருத்ரம் 1-யை விண்ணில் செலுத்தி இந்தியா இன்று சோதனை நடத்தியுள்ளது.

எதிரி ரேடார்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை தாக்குவதற்காக இந்திய விமானப்படை தனது சுகோய் -30 எம்.கே.ஐ போர் விமானங்களில் இருந்து ஏவக்கூடிய கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையான ருத்ரம் 1 ஐ இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. ருத்ரம் ஏவுகணையின் வேகம் ஒலியின் வேகத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்று வான்படையின் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இந்த புதிய தலைமுறை ஆயுதத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணையை இன்று காலை 10.30 மணியளவில் ஒடிசா கடற்கரையில் உள்ள பாலசோரில் சோதனை செய்தனர். "எதிரிகளின் வான் பாதுகாப்பு அமைப்பை அழிக்கவும், எதிரிகளின் எல்லைக்குள் ஆழமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனையும் இந்திய வான்படை இப்போது கொண்டிருக்கிறது" என்று வான்படை அதிகாரி ஒருவர் கூறினார்.