இந்தியா

இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

jagadeesh

பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக மீண்டும் ஒரு முறை பரிசோதித்துள்ளது.

ஒடிஷாவின் பாலசோர் கடற்கரை பகுதியில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. ஏவுகணை 400 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்கியதாக சோதனையை நடத்திய மத்திய அரசின் DRDO அமைப்பு தெரிவித்துள்ளது.

இச்சாதனைக்காக விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். ஒலியை விட 3 மடங்கு வேகமாக பாயக் கூடிய ஏவுகணையான பிரமோஸ் இந்திய - ரஷ்ய கூட்டுத் தயாரிப்பு ஆகும்.

இந்த ஏவுகணைகளை நிலப்பரப்பு மட்டுமல்லாமல் கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், விமானம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏவி எதிரிகளுக்கு பேரிழப்பு ஏற்படுத்த முடியும்.