இந்தியா–பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் எல்லை விவகாரம் நீடிக்கும் நிலையில், நியூயார்க் டைம்ஸ் ஜூலை 29 செய்தியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை “Pakistani Kashmir” என குறிப்பிட்டது சர்ச்சை கிளப்பியது. அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் வெளியிட்டு, அத்தலைப்பு தவறானது, வழிகாட்டும் தன்மை கொண்டது, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் மட்டுமே உண்மை என வலியுறுத்தியது.
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, இன்றுவரை காஷ்மீர் தொடர்பான எல்லைப் பிரச்சனை இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ், கடந்த ஜூலை 29-ஆம் தேதி காஷ்மீர் தொடர்பாக வெளியிட்ட செய்தி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வெளியான அந்த காஷ்மீர் தொடர்பான செய்தியில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை ‘Pakistani Kashmir’ என குறிப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது” அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, அமெரிக்காவுக்கான இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அதில், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் “பாகிஸ்தானிய காஷ்மீர்” எனக் குறிப்பிட்டுள்ள தலைப்பு தவறானது மற்றும் தவறாக வழிகாட்ட கூடியது என்று இந்தியா சாடியுள்ளது. மேலும் பாகிஸ்தானிய காஷ்மீர்’ என்று எதுவும் இல்லை அது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் (Pakistan Occupied Kashmir) மட்டுமே. எனவும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் கடந்த காலத்திலும், தற்போதும், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாகவே இருக்கும்.
இந்தப் பகுதிகளில் சிலவற்றை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. தற்போது அந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு எதிராக வன்முறையையும் பயன்படுத்தி வருகிறது என தனது கண்டனங்களை பதிவு செய்திருக்கிறது.இந்தியா – பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில், வெளிநாட்டு ஊடகம் பயன்படுத்திய ஒரு வார்த்தை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - ராஜ்குமார். ர