இந்தியா

ஃபேஸ்புக் பயனாளர்களின் விவரங்களைக் கேட்டறிவதில் இந்தியா 2வது இடம் 

ஃபேஸ்புக் பயனாளர்களின் விவரங்களைக் கேட்டறிவதில் இந்தியா 2வது இடம் 

webteam

ஃபேஸ்புக் பயனாளர்களின் விவரங்களை கேட்டறிவதில் உலக அளவில் இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.  

2019ஆம் ஆண்டின் முதல் பாதி மாதங்கள் வரை 22 ஆயிரத்து 684 பயனாளர்களின் விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த வலைத்தள ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டின் இதே அரையாண்டில் 16 ஆயிரத்து 580 பயனாளிகள் ‌குறித்த விவரங்களை பேஸ்புக்கிடமிருந்து இந்தியா கேட்டிருக்கிறது. 2013ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பயனாளிகளின் விவரங்கள் அறிவது கணிசமாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

2013ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை, பேஸ்புக்கிடமிருந்து இந்தியா 3 ஆயிரத்து 245 பயனாளிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்துள்ளது. அதுவே 2016ஆம் ஆண்டின் இதே காலங்களில் 6 ஆயிரத்து 324 பயனாளிகள் குறித்தும், நடப்பாண்டில் 22 ஆயிரத்து 684 பயனாளிகள் பற்றியும் இந்தியா விவரங்களைக் கேட்டறிந்துள்ளது.

முகநூலில் பயனாளிகளின் விவரங்களைக் கேட்டதில் இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது. நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் பேஸ்புக்கிடமிருந்து அமெரிக்கா 50 ஆயிரத்து 741 பயனாளிகளின் விவரங்களை கேட்டிருக்கிறது. அடுத்ததாக இந்தியா 22 ஆயிரத்து 684 பயனாளிகள் குறித்தும், பிரிட்டன் 7 ஆயிரத்து 721 பயனாளிகள் பற்றியும், ஜெர்மனி 7 ஆயிரத்து 302 பயனாளிகள் பற்றியும் விவரங்களை கேட்டுள்ளன.