இந்தியா

“2030க்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையம்” - இஸ்ரோ தலைவர் உறுதி

“2030க்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையம்” - இஸ்ரோ தலைவர் உறுதி

webteam

விண்வெளியில் இந்தியாவிற்கென தனியாக ஆய்வு மையம் 2030ஆம் ஆண்டுக்குள் அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் இது தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார். 2030ஆம் ஆண்டிற்குள் விண்வெளியில் இந்தியாவிற்கு என்று தனியாக ஆய்வு மையம் அமைக்கும் திட்டம் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சிவன் தெரிவித்தார். 

நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் 2022 ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாக நிறைவேற்றப்படும் எனவும், இந்தத் திட்டத்திற்கான குழு அடுத்த ஆறு மாதத்தில் அமைக்கப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருக்கிறார். இதற்கிடையே, சந்திராயன் 2 விண்கலத்தை இஸ்ரோ தயார்ப்படுத்தியுள்ளது. இந்த விண்கலம் முதல்முறையாக லேண்டர் (தரையிறங்கு தளம்) மற்றும் ரோவர் (சுழலும் வாகனம்) ஆகியவற்றுடன் நிலவில் தரையிறங்கவுள்ளது.