ஐஃபோன் ஆலை  ஒசூர்
ஐஃபோன் ஆலை ஒசூர் முகநூல்
இந்தியா

தமிழகத்திற்கு நற்செய்தி.. ஒசூரில் வருகிறது இந்தியாவின் மிகப்பெரிய ஐஃபோன் ஆலை!

PT WEB

டாடா நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஆப்பிள் ஐஃபோன் உற்பத்தி தொழிற்சாலையை தமிழகத்தின் ஒசூரில் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐஃபோன்களை சீனாவில் ஒப்பந்த முறையில் அதிகளவில் உற்பத்தி செய்து வந்த நிலையில் தற்போது அதை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மாற்றத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில்  ஐஃபோன்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒப்பந்த முறையில் உற்பத்தி செய்து தரும் நிறுவனங்களில் ஒன்றான டாடா தமிழகத்தின் ஒசூரில் மிகப்பெரிய ஆலையை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றரை ஆண்டுகளில் செயல்பாட்டை தொடங்க உள்ள இந்த ஆலை மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என புளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பெங்களூருவில் ஆப்பிள் ஐஃபோன்களை ஒப்பந்த முறையில் உற்பத்தி செய்து தந்து வந்த விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா ஏற்கனவே கையகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆப்பிள் ஃஐபோன்களை ஒப்பந்த முறையில் உற்பத்தி செய்து வருவதும் இவற்றின் ஆலைகளில் சில சென்னையில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.