இந்தியா

சர்வதேச தங்க விலை நிர்ணயத்தில் இந்தியாவின் கை ஓங்கும் - நிர்மலா சீதாராமன் பேச்சு

webteam

இந்தியாவின் முதலாவது சர்வதேச தங்க வர்த்தகச் சந்தை அகமதாபாத்தில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இனி சர்வதேச தங்க விலை நிர்ணயத்தில் இந்தியாவின் கை ஓங்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தங்கத்தின் விலை, சர்வதேச தங்கச் சந்தையில் நிர்ணயிக்கப்படும் அடிப்படையில் தினந்தோறும் அறிவிக்கப்படுகிறது. தங்கத்தின் தேவையில் பெருமளவுக்கு இறக்குமதியை நம்பியுள்ள நிலையில், இந்தியாவில் பங்கு வணிகம் போலவே தங்க வர்த்தகச் சந்தையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன் மூலம், இந்தியாவில் நடைபெறும் தங்க வர்த்தகத்திற்கு விலையை உள்நாட்டிலேயே நிர்ணயிக்க வாய்ப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

அகமதாபாத்தில் முதலாவது சர்வதேச தங்க வர்த்தக சந்தையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இதனால், தங்கம் விலையை நிர்ணயிப்பதில் சர்வதேச சந்தையுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்ய வழி ஏற்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதனால், சிறிய வர்த்தகர்களுக்கு பயன் ஏற்படுவதுடன் தங்கத்தின் இறக்குமதியும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் சர்வதேச தங்க விலை நிர்ணயத்தில் இந்தியாவின் கை ஓங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.