இந்தியா

விமானப்படையின் அலங்கார ஊர்தியில் இடம் பிடித்த இந்தியாவின் முதல் பெண் ரஃபேல் போர் விமானி

EllusamyKarthik

இந்திய விமானப்படையின் முக்கிய பலமாக திகழும் ரஃபேல் போர் விமானத்தின் முதல் பெண் பைலட்டான் ஷிவாங்கி சிங் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில், விமானப்படையின் அலங்கார ஊர்தியில் நின்றபடி கெத்தாக வலம் வந்தார். கடந்த ஆண்டு விமானப்படையின் அலங்கார ஊர்தியில் பெண் பைலட் பாவ்னா காந்த் இடம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

  

இந்திய விமானப்படையில் கடந்த 2017-இல் இணைந்த ஷிவாங்கி, வாரணாசியை சேர்ந்தவர். ரஃபேல் போர் விமானத்திற்கு முன்னதாக மிக்-21 பைசன் விமானத்தை அவர் இயக்கி வந்தார். இந்திய விமானப்படையின் அம்பாலா (பஞ்சாப்) Squadron (பிரிவு) சேர்ந்தவர் இவர். 

இந்த அலங்கார ஊர்தி இந்திய விமானப்படையில் மாற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. ரஃபேல் போர் விமானத்தின் மாதிரி, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டர் (LCH) மற்றும் 3D கண்காணிப்பு ரேடார் அஸ்லேஷா MK-1 ஆகியவை இந்த அலங்கார ஊர்தியில் இடம் பெற்றிருந்தன. அதே போல மிக்-21 விமானத்தின் மாதிரியும் இதில் இருந்தது.