இந்தியா

மத போதகர் ஜாகிர் நாயக்கின் பாஸ்போர்ட் முடக்கம்

webteam

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பாஸ்போர்ட்டை வெளியுறவு அமைச்சகம் முடக்கியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகரான ஜாகீர் நாயக், சட்ட விரோத பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபட்டது, பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து தேசிய புலனாய்வுத் துறை விசாரித்து வருகிறது. மேலும், அவருக்கு எதிராக பிடி ஆணையும் பிறப்பித்தது.  ஜாகீர் நாயக், தற்போது வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

இந்நிலையில், வெளிநாட்டில் தஞ்சைமடைந்திருக்கும் ஜாகீர் நாயக் வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்ல இயலாத வகையில் அவரின் பாஸ்போர்ட்டை முடக்கி வைக்குமாறு தேசிய புலனாய்வு அமைப்பு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து அவரது பஸ்போர்ட்டை வெளியுறவு அமைச்சம் முடக்கியுள்ளது.