இரு தினங்களுக்குப் பிறகு இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த இரு தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சற்று குறைந்து வந்தது ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருந்தது. ஆனால், இன்று கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 315 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 439 பேர் குணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,780 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 06 லட்சத்து 65 ஆயிரத்து 148 ஆக உயர்ந்துள்ளது. 1 கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்து 731பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் 2 லட்சத்து 26 ஆயிரத்து 188 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் தற்போது 34 லட்சத்து 87 ஆயிரத்து 229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 16 கோடியே 4 லட்சத்து 94 ஆயிரத்து 188 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.