இந்தியா

இந்தியா: மீண்டும் 2 லட்சத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு

webteam

இந்தியாவில் நேற்று 2 லட்சத்திற்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு, இன்று மீண்டும் அதனை தாண்டியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது. தற்போது நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி வந்தது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் பதிவான கொரோனா பாதிப்பு நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதில், “ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,08,921 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,157 பேர் உயிரிழந்துள்ளனர். 2,95,955 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு 2,71,57,795 ஆக உயர்ந்துள்ளது. 2,43,50,816 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 24,95,591 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,11,388 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தினமும் 2 லட்சத்திற்கு அதிகமான நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 40 நாள்களுக்கு பின்னர் நேற்று நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு 1,94,427 ஆக குறைந்தது குறிப்பிடத்தக்கது.