இந்தியா

இந்தியாவில் இன்று எத்தனை பேருக்கு கொரோனா தொற்றால் பாதிப்பு? மத்திய சுகாதாரத்துறை தகவல்

webteam

உலகமெங்கும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 188 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 141 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 4,41,43,483 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். நாடு முழுவதும் தற்போது 3,468 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்‌. கடந்த 24 மணி நேரத்தில் 90,529 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 220.07 கோடி டோஸ்கள் தடுப்பூசி இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தினசரி பரவல் நேர்மறை சதவீதம் 0.14 ஆகவும், வாராந்திர சதவீதம் 0.18 ஆகவும் உள்ளது. நேற்று மட்டும் 1,34,995 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்துடன் கைகோர்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர், பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.