இந்தியா

அதிகரிக்கும் தினசரி பாதிப்பு: மகாராஷ்டிராவில் 25000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று!

EllusamyKarthik

இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 40953 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 25000கக்கும் கூடுதலானவர்கள் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக மகாராஷ்டிராவில் 25000 க்கும் கூடுதலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 28க்கு பிறகு அதிகபட்சமாக ஒரே நாளில் 40953 பேர் இன்று பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது. இருப்பினும் தொற்று பாதிப்பு அங்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. 

அதே போல இந்த ஆண்டில் முதல் முறையாக தமிழகம் மற்றும் மத்திய பிரதேசத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி வகுப்புகளை வரும் 22 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.