இந்தியா

சீன எல்லையில் கூடுதல் படை: பதற்றம் அதிகரிப்பு

சீன எல்லையில் கூடுதல் படை: பதற்றம் அதிகரிப்பு

webteam

சிக்கிம் அருகே சீன எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த கூடுதல் ராணுவ வீரர்களை இந்தியா குவித்துள்ளது. எல்லையில் பதற்றம் நிலவுவதையொட்டி, இரு நாட்டு ராணுவமும் டோக்லா பகுதியில் கடந்த ஒரு மாதமாக வீரர்களை நிறுத்தி வைத்துள்ளன. 
கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற இந்திய யாத்ரீகர்களை சீனா தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது. மேலும், இரு நாட்டு எல்லையில் உள்ள டோகாலாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டதையடுத்து, அங்கு முன்னேறிய இந்திய வீரர்கள் அப்பணியை தடுத்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தற்போது அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களை இந்தியா அங்கு நிறுத்தியிருக்கிறது. 1962ம் ஆண்டு போருக்குப் பிறகு, இரு நாட்டு ராணுவத்தினரும் நீண்ட நாள்கள் முகாமிட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.