பவன் கல்யாண் முகநூல்
இந்தியா

”தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு நிலைப்பாடு தவறானது” - பவன் கல்யாண்!

இந்தியை எதிர்ப்பவர்கள், லாபத்திற்காக திரைப்படத்தை இந்தியில் மொழி மாற்றம் செய்வது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

PT WEB

தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு நிலைப்பாடு தவறானது என, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார்.

ஜனசேனா கட்சியின் 12ஆவது தொடக்க விழாவில் பேசிய அவர், பல மொழிகள் நாட்டிற்கு நல்லது எனவும், தமிழ்நாட்டிற்கும் இந்த கொள்கை பொருந்தும் என்றார். மொழிகளுக்கு எதிராக வெறுப்புணர்வை வளர்ப்பது விவேகமற்றது என கூறிய அவர், இந்தியை எதிர்ப்பவர்கள், லாபத்திற்காக திரைப்படத்தை இந்தியில் மொழி மாற்றம் செய்வது ஏன் என கேள்வி எழுப்பினார்.

இஸ்லாமியர்கள் உருதுவில் தொழுகை நடத்துவதையும், கோயில்களில் சமஸ்கிருத்ததில் மந்திரங்கள் ஒதப்படுவதையும் குறிப்பிட்ட பவன் கல்யாண், இது தமிழ் அல்லது தெலுங்கில் செய்யப்பட வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பினார். சனாதானம் தனது ரத்தத்தில் உள்ளதாகவும், அவர் கூறினார்.