இந்தியா

பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்க நடவடிக்கை: அமைச்சர் நிதின் கட்கரி

webteam

80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நிதின்கட்கரி கூறினார்.

கோவா மாநிலம் பனாஜியில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கவும் சாலைகளில் நெரிசலை குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர் வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

வாகனங்களில் இருந்து வெளிவரும் காற்று மாசை குறைப்பதற்காக, ஸ்வீடன் நாட்டை போல டீசலுக்கு பதில் மெத்தனாலை எரிபொருளாக இந்தியர்கள் பயன்படுத்த வேண்டும். மெத்தனால் ஒரு லிட்டர் 22 ரூபாய்க்கு கிடைக்கும். கடலில் காற்று மாசை குறைக்க கப்பல்களை இயற்கை எரிபொருள் மூலம் இயக்க, கப்பல் தயாரிப்பு நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளது என்று கூறினார்.