இந்தியா

இந்தியா போருக்கு தயாராக வேண்டும்: ராணுவ தளபதி பேச்சு

இந்தியா போருக்கு தயாராக வேண்டும்: ராணுவ தளபதி பேச்சு

webteam

இந்தியா போருக்கு தயாராக வேண்டும் என்று இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறினார்.

டெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், ’டோக்லாம் பிரச்சினை, 73 நாட்களாக நீடித்தது. இந்த பிரச்சினை, பெரிய மோதலுக்கு வழிவகுத்து விடும்.  பாகிஸ்தான் ராணுவமும், அரசியல்வாதிகளும் நமது நாட்டை எதிரியாக பார்க்கின்றனர். அந்த நாடு, நமது நாட்டுடன் மறைமுக போரை நடத்தி வருகிறது. இந்த இரு நாடுகளுடனான மோதல், ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள், குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிந்துவிடக்கூடும் அல்லது முழு அளவிலான போராக உருவெடுக்கலாம். அதனால் இந்தியா போருக்கு தயாராக வேண்டும் என்றார்.