LPG cylinder  ANI
இந்தியா

சூடுபிடிக்கும் இந்தியாவின் எல்பிஜி இறக்குமதி.. பலமடங்கு உயர்வு!

வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கான எல்பிஜி இறக்குமதி விநியோகம் அதிகரித்துள்ளது.

Rishan Vengai

மேற்காசியப் போர் காரணமாக பாதிக்கப்பட்ட இந்தியாவின் எல்பிஜி இறக்குமதி, வளைகுடா நாடுகளிலிருந்து 240% அதிகரித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியே புதிய முயற்சிகள் மூலம் விநியோகம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

மேற்காசியப் போர் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த இந்தியாவின் சமையல் எரிவாயு இறக்குமதி, கடந்த 2 மாதங்களில் மீண்டும் சூடுபிடித்துள்ளது! ஹோர்முஸ் நீரிணை வழியே கப்பலுக்குக் கப்பல் மாற்றி எரிவாயுவைக் கொண்டுவரும் புதிய முயற்சியால் வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கான விநியோகம் அதிகரித்துள்ளது.

LPG cylinder

கடந்த இரண்டு மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவின் சமையல் எரிவாயு இறக்குமதி 5 லட்சத்து 65 ஆயிரத்து 315 டன்கள். இது மேற்காசியப் போர் தொடங்கிய மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இறக்குமதி செய்யப்பட்ட அளவைவிட 240 சதவீத அதிகரிப்பாகும். இதேபோல் குவைத்திலிருந்து இறக்குமதி 248 சதவீதம் அதிகரித்துள்ளது.

கத்தாரிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எல்பிஜி 118 சதவீதம் உயர்ந்துள்ளது. வளைகுடா விநியோகம் மீண்டதால் அமெரிக்க இறக்குமதி 36 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம் சவுதியிலிருந்து 4 மாதங்களாக இறக்குமதி இல்லாததாலும் உள்நாட்டு உற்பத்தி உயர்வினாலும் ஒட்டுமொத்த இறக்குமதி இன்னும் பழைய நிலையை எட்டவில்லை என்று கூறப்படுகிறது.