இந்தியா

ஊரடங்கு நீட்டிப்பால் இந்தியாவுக்கு ரூ.18 லட்சம் கோடி இழப்பு

ஊரடங்கு நீட்டிப்பால் இந்தியாவுக்கு ரூ.18 லட்சம் கோடி இழப்பு

jagadeesh

ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமுடக்கத்தின் காரணமாக இந்தியாவில் சுமார் 18 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என நிதித் தரகு நிறுவனமான பார்க்ளேஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 11 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் சிகிச்சைப்பெற்று 1306 பேர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக 377 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் அதிகளவில் மகராஷ்ட்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

கொரோனா பரவல் தடுப்புக்காக முதல் முறையாக மார்ச் 24ஆம் தேதி முதல் 3 வாரங்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதனால், இந்தியாவுக்கு சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என பார்க்ளேஸ் கணித்திருந்தது. தற்போது 19 நாட்கள் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மொத்தமாக 17 லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல, 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி பூஜ்யம் சதவிகிதமாக இருக்கும் என்றும் பார்க்ளேஸ் கூறியுள்ளது.