இந்தியா

நாட்டின் நீளமான குகைப்பாதை: மோடி திறக்கிறார்

நாட்டின் நீளமான குகைப்பாதை: மோடி திறக்கிறார்

webteam

ஜம்மு-காஷ்மீரில், நாட்டின் மிக நீளமான குகைப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.

ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், செனானி முதல் ரம்பன் மாவட்டம் நாஷ்ரி என்ற இடம் வரையிலான 9.2 கி. மீ தூரமுடைய, நாட்டின் நீளமான குகைப் பாதை பணிகள், கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. தற்போது பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இதை பிரதமர் நரேந்திர மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்தக் குகைப்பாதை மூலம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் வரையிலான பயண நேரம், 2 மணி நேரம் குறையும். பிரதமரின் வருகையையொட்டி, விழா நடைபெறும் உத்தம்பூர் நகர் உள்பட ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பிரிவினைவாதிகள், பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.