இந்தியா

“முதலீடு செய்ய இந்தியாவை விட உலகில் சிறந்த இடம் இல்லை” - நிர்மலா சீதாராமன்

“முதலீடு செய்ய இந்தியாவை விட உலகில் சிறந்த இடம் இல்லை” - நிர்மலா சீதாராமன்

webteam

இந்தியாவை விட சிறந்த இடத்தை முதலீட்டாளர்கள் காண முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளா‌ர்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சர்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் முதலீட்டாளர்களிடம் பேசியபோது, நிர்மலா சீதாராமன் இவ்வாறு கூறியுள்ளார். ஜனநாயகத்தை நேசிக்கும் மற்றும் முதலாளித்துவத்திற்கு மதிப்பளிக்கும் சூழல் இந்தியாவில்தான் உள்ளதாக அவர் தெரிவித்தார். சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை நீடிக்கும் இந்தச் சூழலிலும் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

முதலீட்டாளர்களுக்கு தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், இந்தியாவில் திறமையான மனிதவளம் இருப்பதாகக் கூறினார். இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியே நடைபெறுவதாகத் தெரிவித்த நிதியமைச்சர், முதலீடுகளைச் செய்ய இந்தியாவைவிட மிகச் சிறந்த இடத்தை உலகில் வேறெங்கும் காண முடியாது எனத் தெரிவித்துள்ளார்.