2024ஆம் ஆண்டில் உலகளவில் தங்கம் அதிகளவில் வாங்கிய நாடுகள் பட்டியலில் இந்தியா 2ஆம் இடத்தில் உள்ளது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு இந்திய ரிசர்வ் வங்கி 73 டன் தங்கத்தை வாங்கியதாகவும் இதன் மூலம் அந்நாட்டு வசம் உள்ள தங்கத்தின் கையிருப்பு 876 டன்னாக உயர்ந்துள்ளதாகவும் உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது.
தங்கம் அதிகம் வாங்கிய நாடுகள் பட்டியலில் போலந்து முதலிடத்தில் உள்ளதாகவும் இந்நாடு 90 டன் தங்கம் வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கம் அதிகம் வாங்கிய நாடுகள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உஸ்பெகிஸ்தான், கசகிஸ்தான், சீனா, ஜோர்டான், துருக்கி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.