இந்தியா

உலகின் 5வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா - பிரிட்டனை பின்னுக்கு தள்ளி முன்னேற்றம்

webteam

உலகின் 5-வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

ஜிடிபி (GDP) எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பொருளாதார வலிமை கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகின் பிரபல சந்தை ஆய்வு நிறுவனமான புளூம்பெர்க், கடந்தாண்டில் கடைசி 3 மாதங்களில் நாடுகளின் பொருளாதார வலிமையை வரிசைப்படுத்தியுள்ளன. இதில் 5-வது இடத்தில் இருந்த பிரிட்டன் 6-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. பிரிட்டன் இருந்த 5-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 854 பில்லியன் கோடி டாலராக உயர்ந்துள்ள நிலையில் பிரிட்டன் பொருளாதாரத்தின் மதிப்பு 814 பில்லியன் கோடி டாலராக சரிந்துள்ளது. பொருளாதார வலிமை மிகுந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் 4 இடங்களில் உள்ளன. பத்தாண்டுளுக்கு முன் 11-வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.