இந்தியா

காஷ்மீரில் மனதை கவரும் பனிக்கட்டி உணவகம்! வியக்கும் நெட்டிசன்கள்

jagadeesh

காஷ்மீரில் புகழ்ப்பெற்ற சுற்றுலாத் தளமான குல்மார்கில் ஆங்கிலத்தில் Igloo என்றழைக்கப்படும் பனியால் கட்டப்பட்டு வீட்டை போல உணவகம் திறக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைவதால் சுற்றுலாத் தளங்களில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. நாட்டின் முக்கிய சுற்றுலாத் தளமான காஷ்மீரிலும் ஏராளமான மக்கள் சுற்றுலாவுக்கு மக்கள் குவிந்து வருகின்றனர். குளிர் காலம் என்பதால் காஷ்மீர் பனி போர்த்தப்பட்டு ரம்மியமாக காட்சியளிக்கிறது. அதுவும் அம்மாநில முக்கிய இடமான குல்மார்கில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

அதாவது இக்லூ எனப்படும் பனியால் கட்டப்படும் வீட்டைப் போல உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் கோலஹோய் ஸ்கை ரிசார்ட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்லூ (Igloo) என்பது பனிக்கட்டிகளைக்கொண்டு கட்டப்படும் வீடுகளாகும். ஆர்க்டிக் பகுதிகளில் வாழ்கின்ற எஸ்கிமோவர்கள் இவ்வாறான வீடுகளைக் கட்டி வாழ்வார்கள். வெளியே எவ்வளவு குளிராக இருந்தாலும் இக்லூ வீடுகளில் வெதுவெதுப்பான சீதோஷனம் நிலவும் என்பதுதான் சிறப்பம்சம்.