இந்தியா

`இந்தியாவில் 200 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டாச்சு’- மத்திய சுகாதார அமைச்சகம்

webteam

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,528 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16,113 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தமாக இதுவரை 4,31,13,623 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மொத்தமாக இதுவரை 5,25,785 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். நாடு முழுவதும் தற்போது 1,43,654 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.47 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.20 ஆகவும் உள்ளது. நேற்று மட்டும் 27,78,013 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தமாக 2,00,33,55,257 டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.