இந்தியா

24 மணி நேரத்தில் 40 பேர் பலி; 1,035 பேர் புதிதாக பாதிப்பு; இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

webteam

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 6,761-லிருந்து 7,447 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் பீதியை கிளப்பி வருகிறது. கொரோனாவுக்கு உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,38,216ஆக உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3,69,017ஆக உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 6,761லிருந்து 7,447 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் 1,574 பேருக்கும், தமிழகத்தில் 911 பேருக்கும், டெல்லியில் 903 பேருக்கும், ராஜஸ்தானில் 553 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் 473, ஆந்திராவில் 363, கேரளாவில் 364, கர்நாடகாவில் 207 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 206 லிருந்து 239 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 516 லிருந்து 643 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40 உயிரிழப்புகளும், 1035 பேருக்கு புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.