இந்தியா

புத்தாண்டையொட்டி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய - சீன வீரர்கள்

Veeramani

புத்தாண்டையொட்டி இந்திய -சீன படைகள் எல்லைப்பகுதியில் கிழக்கு லடாக் உள்ளிட்ட 10 இடங்களில் இனிப்புகளை பரிமாறிக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு லடாக் பகுதியில் இந்திய-சீன படைகளுக்கிடையில் கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் இரு நாட்டு படைகளும் இனிப்புகளையும் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டன.

லடாக் பகுதியில் கொன்கலா, சுஷுல் மோல்டோ, டெம்சோக் ஹாட் ஸ்பிரிங்க்ஸ் உள்ளிட்ட இடங்களில் இனிப்புகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இதேபோல் அருணாசலப் பிரதேசத்தில் உள்ள பம்லா மற்றும் வாச்சா டமாய் ஆகிய எல்லைப்பகுதிகளிலும் இரு தரப்பினரும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.