இந்தியா

இந்திய - சீன பிரதமர்கள் பரஸ்பரம் பாராட்டு

இந்திய - சீன பிரதமர்கள் பரஸ்பரம் பாராட்டு

webteam

இந்தியா - சீனா இடையில் எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து வரும் நிலையில் இரு நாட்டு பிரதமர்களும் பரஸ்பரம் பாராட்டிக் கொண்டனர்.

ஜெர்மனியில் ஜி 20 நாடுகளின் கூட்டத்திற்கு முன்னதாக பிரிக்ஸ் நாடுகளின் அதிகாரபூர்வமற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், பயங்கரவாத செயல்பாடுகளை ஜி 20 நாடுகள் ஒருங்கிணைந்து ஒடுக்க வேண்டும். சீன பிரதமர் சி ஜிங்பிங் தலைமையில் பிரிக்ஸ் அமைப்பின் செயல்பாடுகள் உத்வேகம் பெற்று வருகிறது என்று பாராட்டினார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக சீன பிரதமர் சி ஜிங்பிங்கும் மோடிக்கு பாராட்டு தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சியில் இந்தியா வெற்றி கண்டு வருகிறது என்றும் அவர் கூறினார். இரு நாடுகளுக்கு இடையில் எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து வரும் நிலையில் இரு நாட்டு பிரதமர்களும் பரஸ்பரம் பாராட்டிக்கொண்டனர்.