இந்தியா

“புலம்பெயர்ந்த தொழிலாளர் நலனில்  மத்திய அரசுக்கு அக்கறை தேவை”- மன்மோகன் சிங் 

“புலம்பெயர்ந்த தொழிலாளர் நலனில்  மத்திய அரசுக்கு அக்கறை தேவை”- மன்மோகன் சிங் 

webteam
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது அக்கறை செலுத்தி மருத்துவ பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தாமல் கொரோனா போரில் வெல்ல முடியாது எனக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஆகவே நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் காணொலி வெளியிட்டுள்ளனர். அதில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனின் அக்கறை செலுத்த மத்திய அரசுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். மனிதநேயம், பாதுகாப்பு உள்ளிட்ட வழிமுறைகளோடு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அணுகவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 
 
 
மேலும் இது தொடர்பாகப் பேசியுள்ள ராகுல்காந்தி புலம் பெயர் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் மாநில அரசுகள் பொறுப்புணர்வுடன் நடப்பதாகத் தெரிவித்தார். இரு மாநிலங்கள் இடையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து அரசுகள் பேச வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்குச் செல்ல அவர்களை அனுமதிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.