உச்ச நீதிமன்றம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ட்விட்டர்
இந்தியா

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு | உச்ச நீதிமன்றத்தை நாட I-N-D-I-A கூட்டணி முடிவு!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு விவகாரம் தொடர்பாக I-N-D-I-A கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாக அறிவித்துள்ளன.

PT WEB

தேசிய வாத காங்கிரஸ் கட்சி சரத் பவார் பிரிவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் ஜக்தாப், இதனை தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் அவரை ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்வி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய வாத காங்கிரஸ் கட்சி சரத்பவார் பிரிவின் பிரசாந்த் ஜக்தாப், நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து விவாதித்ததாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வாக்குப்பதிவு இயந்திரம்

அண்மையில் நடைபெற்று முடிந்த மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றதாக I-N-D-I-A கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றன. இப்புகாரை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.