பாஜக 123 தி.காங் 108 காங்கிரஸ் 5 பிற 3
பாஜக 118 தி.காங் 110 காங்கிரஸ் 5 பிற 0
பாஜக 69 இண்டியா 16 ஏஐயுடிஎஃப் 1 பிற 1
ஐக்கிய ஜனநாயக முன்னணி 74 இடது ஜனநாயக முன்னணி 58 என்டிஏ 3 பிற 2
தி.காங் 118 பாஜக 107 காங்கிரஸ் 5 பிற 0
பாஜக 22 காங்கிரஸ் 6 பிற 1
பாஜக 63 இண்டியா 9 ஏஐயுடிஎஃப் 0 மற்றவை 1
இடது ஜனநாயக முன்னணி 59 ஐக்கிய ஜனநாயக முன்னணி 55 என் டி ஏ 2 பிற 2
தி.காங் 112 பாஜக 113 காங்ரஸ் 5 பிற 0
மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, மாநிலத்தின் சில பகுதிகளில் திட்டமிட்டு மின்வெட்டு மேற்கொள்ளப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வாக்குகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு வெளியே கட்சித் தொண்டர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கேரளாவில் இன்னும் சற்று நேரத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில், மூத்த தலைவர் சசி தரூரிடம், ‘அடுத்த முதல்வர் நீங்கள்தானா’எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், "நீங்கள் என்னை என்ன சொல்ல வைக்க முயற்சிக்கிறீர்கள் என்பது எனக்குத் துல்லியமாகத் தெரியும். நான் அதையெல்லாம் சொல்லப் போவதில்லை. காங்கிரஸ் கட்சியில் ஒரு வழக்கமான நடைமுறை உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்சியின் தலைவரின் பிரதிநிதி சந்திப்பார். சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அந்த நபர் புரிந்துகொள்வார். மேலிடம் அதைக் கருத்தில்கொண்டு இறுதி முடிவை எடுக்கும். அதன் பிறகு, அவர்கள் எந்த விதிகளுக்கோ அல்லது வரம்புகளுக்கோ கட்டுப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் விரும்பியதை தேர்வு செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலில், இதுவரை இல்லாத அளவாக 92.47 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 4 வது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் இருக்கும் நிலையில், பாஜக கடும் போட்டி தருகிறது.