மாதிரி போர்க்கப்பல்
மாதிரி போர்க்கப்பல்  ட்விட்டர்
இந்தியா

ரூ.40,000 கோடி செலவில் இரண்டாவது விமானந்தாங்கி போா்க்கப்பல் தயாரிக்க இந்தியா முடிவு!

Prakash J

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனைச் சமாளிக்க இந்தியாவுக்கு மேலும் விமானந்தாங்கி கப்பல் தேவைப்படுகிறது. ஏற்கெனவே இந்தியாவிடம் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் உள்ளிட்ட 2 விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் 262 மீட்டர் நீளம், 59 மீட்டர் உயரம், 62 மீட்டர் அகலம் கொண்டதாகும். இதன் மொத்த எடை 40,000 டன்கள்.

கப்பலின் அதிகபட்ச வேகம் 28 நாட்ஸ் ஆகும். மொத்தம் 14 அடுக்குகள் கொண்ட இந்தக் கப்பலில் 2,300 அறைகள் உள்ளன. கடற்படை அதிகாரிகள், வீரர்கள் என 1,700 பேர் கப்பலில் பயணிக்க முடியும். 34 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அதுபோல், 45 ஆயிரம் டன் எடை கொண்ட ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் 26 MiG-29K போர் விமானங்கள், Ka-28 நீர்மூழ்கி எதிர்ப்பு போர் ஹெலிகாப்டர்கள் உட்பட 36 வானூர்திகள் உள்ளன.

இதையும் படிக்க: உலகின் ஏழை நாடுகள் பட்டியல்: முதலிடத்தில் புருண்டி நாடு.. 2வது இடத்தில் ஆப்கானிஸ்தான்!

எனினும் இவற்றைவிட வலிமையாக ரூ.40,000 கோடி செலவில் இரண்டாவது உள்நாட்டு தயாரிப்பு விமானந்தாங்கி போா்க் கப்பலை கட்டும் முன்மொழிவுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்க உள்ளது. நாட்டின் போர் திறனை அதிகரிக்கவும், ராணுவ பலத்தை வலுப்படுத்தவும் பாதுகாப்பு துறைக்கு தேவையான தளவாட கொள்முதல், உற்பத்தி ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்து வருகிறது.

அந்தவகையில், உள்நாட்டிலேயே கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் ரூ.40,000 கோடி செலவில் மேலும் ஒரு விமானம் தாங்கி கப்பல் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட இருக்கிறது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை (நவ.30) பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (டிஏசி) கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய முயற்சி: ஜோடிகளை நிறுத்தி தேர்ந்தெடுக்க களம் அமைத்த தென்கொரியா!