இந்தியா

இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது: யஷ்வந்த் சின்ஹாவிற்கு ராஜ்நாத்சிங் பதில்

இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது: யஷ்வந்த் சின்ஹாவிற்கு ராஜ்நாத்சிங் பதில்

webteam

பொருளாதாரத்தில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருவதாகவும், அதற்கு நிதியமைச்சர் அருண்ஜேட்லியே காரணம் என கூறியிருந்தார். பிரதமர் மோடியையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பொருளாதாரத்தில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை உலகின் அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது. உலக அரங்கில் பொருளாதார ரீதியாக இந்தியா தனது நம்பகத்தன்மையை நிலை நாட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு யஷ்வந்த் சின்ஹா எழுதிய கட்டுரையில், இந்தியாவின் பொருளாதாரம் இறங்குமுகத்தில் உள்ளதற்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லியே பொறுப்பு. இந்த சூழலிலும் இதை சொல்லவில்லையென்றால், நான் நாட்டிற்கு ஆற்றும் கடமையில் தவறியதாக ஆகிவிடும் என்று கூறியிருந்தார்.