“இந்தியாவின் 1 சதவிகித செல்வந்தர்களின் சொத்து கடந்த 2018ல் 39 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆனால் ஏழை மக்களின் செல்வங்கள் வெறும் 3 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது” என்கிற தகவலை ஆக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆக்ஸ்பாம் நிறுவனம் ஆனது உலக அளவில் பணக்காரர்கள், ஏழைகளில் சொத்து மதிப்பு குறித்து ஆண்டுதோறும் ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றது. தற்போது, 2018ம் ஆண்டில் இந்தியர்களில் சொத்துக்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வறிக்கையில், இந்தியாவில் உள்ள ஒரு சதவிகித பணக்காரர்களின் சொத்து மதிப்பு 39 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,
“ 2018-19ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் மதிப்பு சுமார் 24 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் சொத்து மதிப்பு 28 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது” எனவும் தெரிவித்துள்ளது.
ஆய்வில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள்:-
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆக்ஸ்பாம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வின்னிய பைனானியா “சில செல்வந்தர்கள் இந்தியாவில் மொத்த சொத்துக்களில் அதிக அளவை வைத்துள்ளனர். ஆனால் ஏழை மக்கள் இன்னும் தங்களுடைய குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு கொடுப்பதற்கும் மருந்து வாங்கி தருவதற்கும் பணமின்றி தவிக்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் விரைவில் இந்தியாவின் சமூக மற்றும் ஜனநாயக கட்டுமானம் சிதைந்துவிடும்”என்கிறார்.