இந்தியா

டோக்லாமில் மீண்டும் பதற்றம்: 1800 வீரர்களை களமிறக்கியது சீனா!

webteam

சிக்கிம் எல்லையில் உள்ள டோக்லாமில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து அங்கு கூடுதலாக ஆயிரத்து 800 வீரர்களை சீனா நிறுத்தி வைத்துள்ளது. 

இந்தியாவின் சிக்கிம், பூடான், திபெத் பகுதி இணையும் இடத்தில் இருக்கிறது டோக்லாம் பகுதி. இங்கு சாலை வசதி உட்பட பல்வேறு கட்டமைப்புப் பணிகளை சீனா மேற்கொள்ள முயன்றது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பணிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு சர்ச்சைக்குரிய அந்தப் பகுதியில் இருந்து சீன ராணுவம் பின் வாங்கியது. இதையடுத்து அந்தப் பகுதியில் அமைதி நிலவி வந்த நிலையில் சீனா அங்கு மீண்டும் தங்கள் ராணுவத்தை நிறுத்தியுள்ளது. 

டோக்லாமில் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கூடுதல் வீரர்களை சீனா நிறுத்தி 1800 கூடுதல் வீரர்கள் வந்துள்ள நிலையில் அவர்கள் அப்பகுதியில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். மேலும், அதன் அருகில் இரண்டு ஹெலிகாபடர் இறங்கும் தளங்களையும், அதிநவீன தங்கும் இடங்களையும் சீனா உருவாக்கி வருகிறது. 
இந்நிலையில் அப்பகுதிக்கு இந்தியாவும் அதிக வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் டோக்லாமில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.