இந்தியா

பூடானுடன் இந்தியாவின் உறவு தனித்துவமானது - பிரதமர் மோடி

பூடானுடன் இந்தியாவின் உறவு தனித்துவமானது - பிரதமர் மோடி

webteam

இந்தியாவும் - பூடானும் இயல்பான நட்பு நாடுகள் என்றும் இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்றை புரிந்துகொண்டு பகிர்ந்துகொள்வதைப் போல் உலகில் வேறு எந்த 2 நாடுகளும் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பூடானுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி திம்புவில் பூடான் ராய் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பூடான் மற்றும் இந்தியா அண்டை நாடுகளாக இருப்பதுடன், கலாசார, ஆன்மிக ரீதியாக தனித்துவமான நெருக்கமான உறவை உருவாக்கியிருப்பதாக தெரிவித்தார். இந்த பயணத்தின் போது, பூடானின் தலைவர்களுடன் நெருக்கமாக கலந்துரையாட வாய்ப்பு கிடைத்ததாகவும், இந்திய - பூடான் உறவு தொடர்பாக அவர்களிடம் வழிகாட்டுதலையும் பெற்றிருப்பதாகவும் மோடி கூறினார். 

புனல் மின் உற்பத்தி, மற்றும் எரிசக்தி துறையில் இந்தியா பூடான் இடையேயேயான ஒத்துழைப்பு சிறப்பானது என குறிப்பிட்ட மோடி, எனினும் இரு நாட்டு உறவுகளின் சக்தியாக இருப்பது மக்கள்தான் என குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி மீண்டும் பதவியேற்றுக்கொண்டபின் பூடானுக்கே தமது முதலாவது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது பூடானுடன் விண்வெளி ஆராய்ச்சி, விமான போக்குவரத்து, எரிசக்தி, கல்வி உள்ளிட்ட துறைகளில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.