சுதந்திர தினத்தன்று மாநிலங்கள், யூனியன்பிரதேசங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், “கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களை சுதந்திர தின விழாவுக்கு அழைக்க வேண்டும். கோவிட் -19 நோய்த்தொற்றிலிருந்து குணப்படுத்தப்பட்ட சில நபர்களும் அழைக்கப்படலாம். சுதந்திர தின விழாவில் பெரிய அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிவது உள்ளிட்டவை பின்பற்றப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுதந்திர தினத்தை கொண்டாடலாம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.